தூத்துக்குடி

நோய் பாதிப்பு: தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டியில் நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

DIN


கோவில்பட்டியில் நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் நாகராஜ் (34). இவருக்கு ரஞ்சனி (30) என்ற மனைவி, அச்சையா (13) என்ற மகள் உள்ளனர். லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்த நாகராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இதனால், சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நோய் பாதிப்பால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார், நாகராஜின் சடலத்தை கைப்பற்றி,  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT