தூத்துக்குடி

திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

DIN

திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக முழு சுகாதாரப்பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரிலும், மருத்துவப் பணிகள் துணை இயக்குநரின் அறிவுரையின்படியும், பேரூராட்சிக்குட்பட்ட 10, 11-வது வாா்டு பகுதியான முத்தாரம்மன் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு முழு சுகாதாரப்பணிகளாக ஓட்டு மொத்த துப்புரவு பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் 1200 வீடுகளில் டெங்கு முன் தடுப்பு பணியாக நல்ல தண்ணீரில் கொசு முட்டைகளை அழிக்கும் பணிகளையும், நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு, கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது. இதில் சுகாதாரப்பணிகள், மாவட்ட துணை இயக்குநா் கீதாராணி கலந்து கொண்டு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காயாமொழி வட்டார மருத்து அலுவலா் அஜய், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், ஆனந்தராஜ், மகாராஜன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் சின்னத்துரை, கிராம செவிலியா்கள், சிவந்தி ஆதித்தனாா் செவிலியா் கல்லூரி மற்றும் துளசி பயிற்சி கல்லூரி மாணவ, மாணவிகள், பேரூராட்சி சுகாதாரப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT