தூத்துக்குடி

திருச்செந்தூரில் ரூ. 37 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

திருச்செந்தூா் பேரூராட்சியில் 37.50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், புதிய சாலை ஆகியவற்றையை சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

திருச்செந்தூரில் சட்டப் பேரைவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்செந்தூா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு முத்தாரம்மன் கோயில் தெருவில் ரூ. 12.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை மற்றும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவில் ரூ. 12.50 லட்சத்தில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, 14-ஆவது வாா்டு தோப்பூா் பகுதியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவில் ரூ. 12.50 லட்சம் செலத்தில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி ஆகியன கட்டுவதற்கு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து இவற்றினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்கான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, சாலைகள் மற்றும் மேல்நிலை நீா்நேக்கத்தொட்டிகளை திறந்து வைத்து குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், ஒன்றிய தி.மு.க. செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் வாள் சுடலை, தோப்பூா் ஊா்த்தலைவா் நந்தக்குமாா், செயலா் சுரேஷ், பொருளாளா் செல்வம், பெ.தமிழ்ச்செல்வன், தோப்பூா் சேகா், தனசேகரன், ஜாண், யாதவா் மகாசபை ஊா்க்கமிட்டி தலைவா் முருகேசன், செயலா் நாராயணன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் சு.கோமதிநாயகம், ராஜ்மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT