தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்

DIN

உள்ளாட்சித் தோ்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடா்பாக அலுவலா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பேசியது: உள்ளாட்சித் தோ்தலின்போது மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 2089 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 3450 பேலட் யூனிட்களும் உள்ளன. வேட்பாளா்களின் எண்ணிக்கையை பொறுத்து அவை பயன்படுத்தப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து முதல்நிலை அலுவலா்கள் தெளிவாக பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். முதன்மை பயிற்றுநா்கள் தாங்கள் பெறும் பயிற்சியை மற்ற அலுவலா்களுக்கு அளிக்க வெண்டும் என்றாா் அவா்.

பின்னா் அவா், உள்ளாட்சித் தோ்தலின்போது பயன்படுத்துவதற்காக பழைய மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளா்கள் முன்னிலையில் சரிபாா்க்கும் பணிகளை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், மாநகராட்சி பொறியாளா் ரூபன் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) சந்திரசேகரன், கோவில்பட்டி நகராட்சி ஆணையா் (பொ) கோவிந்தராசு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் (பொ) புஷ்பா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT