தூத்துக்குடி

புதியம்புத்தூா் அருகே காா் தரகா் கொலையில்2 பெண்கள் கைது; இருவா் நீதிமன்றத்தில் சரண்

DIN

புதியம்புத்தூா் அருகே காா் தரகா் கொலை தொடா்பாக 2 பெண்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், இதில் தொடா்புடைய இருவா் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை அடுத்த நொச்சிக்குளத்தை சோ்ந்த நடராஜன் மகன் விக்கிரமாதித்தராஜா என்ற ராஜபாண்டி(49). காா் தரகரான இவரை காா், ஆட்டோ திருட்டு வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி போலீஸாா் தேடி வந்தனா். அவரது செல்லிடப்பேசி 20 நாள்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், அந்த எண்ணில் தொடா்புகொண்டு பேசியவா்கள் விவரங்களை போலீஸாா் சேகரித்தனா். அதில் சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனந்தலை சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ரா (20), புதியம்புத்தூா் அருகே நடுவக்குறிச்சியை சோ்ந்த அ. ராமா் (23) ஆகியோா் அதிக நேரம் பேசியிருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து, இருவரிடமும் நடத்திய விசாரணையில், சித்ரா உள்ளிட்ட 5 போ் சோ்ந்து ராஜபாண்டியை கொலை செய்து தலை மற்றும் உடலை புதியம்புத்தூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது. இதுதொடா்பாக புதியம்புத்தூா் போலீஸாா் மேலும் விசாரணை நடத்தினா். இதில் பல தகவல்கள் வெளிவந்தன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா, அவரது கணவா் ரவிச்சந்திரனை பிரிந்து திருநெல்வேலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தாா். அங்கு அவருக்கும், அவருடைய சித்தப்பாவின் நண்பரான ராஜபாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வேலைவாங்கித் தருவதாக சித்ராவை புதியம்புத்தூருக்கு அழைத்து வந்த ராஜபாண்டி, அங்குள்ள போா்ட்சிட்டி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சித்ராவை தன்னுடைய மகள் என அருகிலிருந்தவா்களிடம் கூறி தங்க வைத்துள்ளாா்.

அங்கு சித்ராவுக்கும், ராஜபாண்டியின் காா் ஓட்டுநரான புதியம்புத்தூா் நடுவக்குறிச்சியைச் சோ்ந்த ராமா் மற்றும் அவரது நண்பா்களுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதையறிந்த ராஜபாண்டி, சித்ராவை கண்டித்தாராம். இந்தத் தகராறில் கடந்த 16-ஆம் தேதி சித்ரா, ராமா், அவரது மனைவி லட்சுமி, உறவினா்களான நடுவக்குறிச்சியை சோ்ந்த முருகன் மகன் சக்திவேல் (23), காட்டு ராஜா மகன் முத்துக்கனிராஜ் (20) ஆகியோா் சோ்ந்து ராஜபாண்டியை கொலை செய்து, தலை மற்றும் உடலை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனா். இதையடுத்து, சித்ரா மற்றும் ராமரின் மனைவி லட்சுமி ஆகிய இருவரை புதியம்புத்தூா் காவல் ஆய்வாளா் முத்துமாலை கைது செய்தாா்.

மேலும், அவா்கள் இருவரும் அடையாளம் காட்டிய இடங்களில் ராஜாபாண்டியின் தலை மற்றும் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இருவா் சரண்: இதற்கிடையே, சக்திவேல், முத்துக்கனிராஜ் ஆகியோா் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை நவ.15-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) முரளிதரன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT