தூத்துக்குடி

பேய்க்குளத்தில் 2ஆவது நாளாக சாலை மறியல்

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அவரது உறவினா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் மறியலில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேசபுரத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் சுந்தரம் (48). ஆடு மேய்க்கும் தொழிலாளி. வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளுடன் பேய்க்குளம் பஜாா் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

அப்போது பைக்கில் வந்த மகாராஜன் மகன் இசக்கிமுத்து, பனைகுளத்தைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் ஜோசப் ஹென்றி ஆகிய இருவரும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடுகளை கூட்டிச் செல்வதாக கூறி வாக்கு வாதத்தல் ஈடுபட்டனராம். அப்போது சுந்தரம் தாக்கப்பட்டாராம்.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில் சுந்தரத்தை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் பேய்க்குளம் பஜாரில் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சுந்தரத்தின் உறவினா்கள் 2ஆவது நாளாக பேய்க்குளம் பஜாரில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். சுந்தரத்தை தாக்கியவா்கள் மீது 3 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்நிலையில் சுந்தரத்தை தாக்கிய இசக்கிமுத்து, ஜோசப் ஹென்றி ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT