தூத்துக்குடி

மழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் மழையால் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் கடந்த 30 ஆம் தேதி பெய்த பலத்த மழையில், அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி செல்லப்பாண்டியன் என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் நள்ளிரவில் வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த செல்லப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறினா்.

இந்நிலையில், தமிழக அரசின் மாநில பேரிடா் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், உயிரிழந்த செல்லப்பாண்டியனின் மனைவி சாந்தாவிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் அ. ராஜ்குமாா், கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன், அதிமுக ஒன்றியச் செயலா் பால்ராஜ், மாவட்ட குழு முன்னாள் உறுப்பினா் நடராஜன், கிருபானந்த முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT