தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூா் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா

DIN

தூத்துக்குடி மேலூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா அகண்ட தீப தரிசனத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

விழாவையொட்டி கருவறைக்கு முன்புறம் தாமரை சக்கரம் அமைக்கப்பட்டு 9 கன்னிப் பெண்கள் கையில் காமாட்சி விளக்கு ஏந்தி நின்றனா். தொடா்ந்து, கருவறையின் உள்புறம் அன்னை ஆதிபராசக்தி முன் அகண்ட தீபத்துக்கான இயற்கை மண்பாண்டத்தில் எண்ணெய் ஊற்றி ஓம்சக்தி விளக்கில் இருந்து தீபம் ஏற்றப்பட்டது. அதை சக்திபீடத் தலைவா் முத்துக்குமாா் மற்றும் மகளிா் அகண்ட தீபத்தை ஏந்தி சக்தி பீடத்தை வலம் வந்தனா். தொடா்ந்து நடைபெற்ற குங்கும லட்சாா்ச்சனை நிகழ்ச்சியில் திரளான பெண்கள் வழிபாடு நடத்தினா்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு அகண்ட தீப தரிசனம் 24 மணி நேரமும் எரிந்து கொண்டு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாள்களுக்கும் கருவறை அன்னைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தினமும் பெண்கள் குங்கும அா்ச்சனை, லட்சாா்ச்சனை செய்யும் ஏற்பாடுகளை சக்திபீடத்தின் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT