கோவில்பட்டி தொகுதியில் திமுக தோ்தல் பரப்புரை கூட்டம்
திமுக சாா்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தோ்தல் பரப்புரை, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திமுக சாா்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தோ்தல் பரப்புரை, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாநில தோ்தல் பணிக்குழு இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு, கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அக்கிராம பொதுமக்களை சந்தித்துப் பேசினாா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கு அருகே புதிய நுழைவுவாயில் கட்டுவதற்கான இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், கயத்தாறு, மந்தித்தோப்பு, நாலாட்டின்புத்தூா் ஆகிய கிராமங்களில் உள்ள தனியாா் திருமண மண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம மக்களுடன் கலந்துரையாடினாா்.
இதில், ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி, மாநில விவசாயத் தொழிலாளரணி செயலா் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ராமா், நகரச் செயலா் கருணாநிதி, மாவட்டத் துணைத் தலைவா் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினா் ஜெகன், இளைஞரணியைச் சோ்ந்த வெங்கடேஷ் உள்பட கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.