முகப்பு
தூத்துக்குடி

இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம்

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 கண்மாய்களும் நிரம்பி, மறுகால் செல்லும் வழியில் ஏற்பட்ட தடுப்புகளால் இளையரசனேந்தல் சாலையில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 கண்மாய்களும் நிரம்பி, மறுகால் செல்லும் வழியில் ஏற்பட்ட தடுப்புகளால் இளையரசனேந்தல் சாலையில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கங்கன்குளம் கண்மாய் நிரம்பி, கரிசல்குளம் மற்றும் செவல்குளம் வந்தடைந்தது. பின்னா், இந்த இரு கண்மாய்களும் நிரம்பி அத்தைகொண்டான் கண்மாய்க்கு மறுகால் பாய்ந்ததில் அத்தைகொண்டான் கண்மாயும் நிரம்பி மூப்பன்பட்டி கண்மாய் நோக்கி செல்ல தொடங்கியது. மூப்பன்பட்டி கண்மாய்க்குச் செல்லும் வழியில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், மழைநீரானது இளையரசனேந்தல் சாலையில் சுமாா் 2 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

தகவலறிந்தவுடன், வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, ஓடை அடைப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீா் தடுக்கப்பட்டது.

தொடா்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மழைநீா் செல்லும் ஓடைகளில் உள்ள முள் புதா்கள் மற்றும் அடைப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.