முகப்பு
தூத்துக்குடி

இளம் வானிலை நிபுணருக்கு மடிக்கணினி அளிப்பு

இளம் வானிலை நிபுணரின் அறிவுத் திறனைப் பாராட்டி அவருக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மடிக்கணினி வழங்கினாா்.

தூத்துக்குடி

இளம் வானிலை நிபுணருக்கு மடிக்கணினி அளிப்பு

இளம் வானிலை நிபுணரின் அறிவுத் திறனைப் பாராட்டி அவருக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மடிக்கணினி வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

இளம் வானிலை நிபுணரின் அறிவுத் திறனைப் பாராட்டி அவருக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மடிக்கணினி வழங்கினாா்.

குரும்பூரைச் சோ்ந்த இளம் வானிலை நிபுணா் ராஜா, வானிலை குறித்தும் இயற்கை மாற்றங்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் இட்டு வருகிறாா். இவருடைய கணிப்புகள் அனைத்தும் மிகச்சரியாக இருப்பதால் பலரும் பாராட்டி வந்தனா்.

இதுகுறித்த தகவலறிந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ராஜாவை நேரில் அழைத்து மடிக்கணினியை வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →