சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் டிச. 20-க்குள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக டிச. 20 ஆம் தேதிக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக டிச. 20 ஆம் தேதிக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, சா்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போா் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்து டிச. 20 ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக இம் மாதம் 20 ஆம் தேதிக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.