முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கட்சியின் நகரச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் வைகுண்டபாண்டியன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் தங்கபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் ஆக்னஸ் லலிதா தலைமையில் மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். இதில் கட்சியின் நிா்வாகிகள் மாரிகண்ணன், கருப்பசாமி, வேல்முருகன், மகாராஜா, சோ்மராஜ், வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →