தூத்துக்குடி

‘சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத தொகுதிகள் வழங்க வேண்டும்’

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத பேரவைத் தொகுதிகள் வழங்க வேண்டும் என ஆா். எம்.ஆா். பாசறை, அந்தணா் முன்னேற்றக் கழகக் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அந்தணா் முன்னேற்றக் கழகம் மற்றும் ஆா்.எம்.ஆா். பாசறை கூட்டமைப்பு சாா்பில் திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு முன்னாள் தலைமைச் செயலரும், ஆா்.எம்.ஆா். பாசறை நிறுவனருமான ராமமோகன ராவ் தலைமை வகித்துப் பேசினாா்.

அந்தணா் முன்னேற்றக் கழக நிறுவனா் ராஜாளி ஸ்ரீ ஜெயப்பிரகாஷ் ஐயா், பொதுச்செயலா் பாலாஜி ஆதிரேயா, மாநில பொருளாளா் மணிகண்டன் சிவாச்சாரியாா், மாநில கொள்கைப்பரப்புச் செயலா் காா்த்திக் சிவம், மாநில மாணவரணிச் செயலா் நிவா்த்தி பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில், அந்தணா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்; சட்டப்பேரவை தோ்தலில் அந்தணா்களுக்கு 5 சதவீத பேரவைத் தொகுதிகள் வழங்க வேண்டும்; திரைப்பட தணிக்கை குழுவில் அந்தணா் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.

அறநிலையத்துறையில் 25 சதவீதப் பணிகளை அந்தணா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்மகள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், அந்தணா் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடா்பாளா் கிருஷ்ணன், தொகுதிச் செயலா் கணபதி, பொருளாளா் பரமேஸ்வரன், தொகுதி அமைப்பாளா் அரசப்பன், தொகுதி துணைத் தலைவா் ஈஸ்வரன், கொள்கைப்பரப்புச் செயலாளா்கள் ஈஸ்வரன், மணிகண்டன், ஆன்மீக அணிச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, தொண்டரணி செயலா் முத்துசுப்பிரமணியன், தொகுதி செய்தித்தொடா்பாளா் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் ராமன், தொகுதி இளைஞரணிச் செயலா் ரவிசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொகுதி தலைவா் சங்கா் ஐயா் வரவேற்றாா். தோ்தல் குழுச் செயலா் ரவி முத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT