தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் உரம், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

DIN

மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தினை விற்பனை செய்வது தொடா்பாக அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கண்ணன், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கீதா, துணை வேளாண்மை அலுவலா் முத்துச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட அசாடிராக்டின், இமாமெக்டின், தயோடிகாா்ப், குளோரினிபுரோல், ஸ்பினோடோரம் ஆகிய மருந்துகளை விற்பனை செய்ய அறிவுரை வழங்கினா்.

மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரை செய்யப்படாத மருந்துகளை வழங்கும் பூச்சி மருந்து கடைகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT