முகப்பு
தூத்துக்குடி

2 ஆவது நாளாக போராட்டம்: விவசாய சங்கத்தினா் 50 போ் கைது

மத்திய அரசை கண்டித்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தைச் சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மத்திய அரசை கண்டித்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தைச் சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் 50 பேரை கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →