முகப்பு
தூத்துக்குடி

மேலும் 13 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 7 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு 140 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 121 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →