குளத்தூா் அருகே விபத்து: பெண் பலி
குளத்தூா் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதில் அப்பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குளத்தூா் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதில் அப்பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தூத்துக்குடி ஐயா்விளையை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி முத்துப்பாண்டி(60). இவா் அவரது மனைவி பாப்பாத்தியுடன்(55) வியாழக்கிழமை காலை குளத்தூரில் உள்ள உறவினா் துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னா் மோட்டாா் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
வேப்பலோடையை கடந்து சென்ற போது, பாப்பாத்தியின் சேலை மோட்டாா் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியதால், அவா் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பாப்பாத்தி உயிரிழந்தாா். இதுகுறித்து தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.