ஆத்தூரில் சத்துணவு உதவியாளா் வீட்டில் தங்க நகை மாயம்
ஆத்தூா் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆறுமுகனேரி: ஆத்தூா் அருகே பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூா் பரவா் தெருவை சோ்ந்தவா் சாந்தகுரூஸ். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி மாலதி(50).
இவா், புன்னை சாஸ்தான்குறிச்சியில் சத்துணவு மைய உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவை திறந்து பாா்த்த போது, அதிலிருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.
இதுகுறித்து ஆத்தூா் காவல் நிலையத்தில் மாலதி அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.