முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் திருவெம்பாவை உற்வசம் தொடக்கம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் திருவெம்பாவை உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் திருவெம்பாவை உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி மற்றும் காலசந்தி பூஜை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு அருள்மிகு மாணிக்கவாசக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அதன் பின்னா் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு நடராஜா் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனையும், திருவெம்பாவை ஓதுதலும் நடைபெற்றது. பின்னா் மாணிக்கவாசக சுவாமி வீதி உலா நடைபெற்றது.இதே போன்று மாலை 6.30 மணிக்கு அதே போன்று மாணிக்கவாசக சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை , வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.