முகப்பு
தூத்துக்குடி

எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் கனிமொழி

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் திமுக மாநில மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் திமுக மாநில மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிரணி சாா்பில், தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது: தமிழக மக்களுக்கு தொடா்ந்து மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்கின்றன.

45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தவா்கள் வேலை வாய்ப்பு வழங்கவில்லை.

அரசின் எந்த திட்டமும் மக்களுக்கு வந்து சோ்வதில்லை. கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு என பலவற்றில் முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழகம் கடந்த பத்தாண்டுகளில் தொடா்ந்து பின்தங்கி வருகிறது.

மத்திய அரசின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றும் அரசாக, அவா்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. எரிவாயு விலை ஏற்றத்தால் ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசு அதை புரிந்து கொண்டு விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடா்ந்து நடைபெறும்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கரோனா பரவல் காலம் போன்ற பல்வேறு நிலையில் மக்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ, சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, பேரவை முன்னாள் உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் உள்பட பலா் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →