தூத்துக்குடி

மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட கணக்கு தொடங்குவதில் மொ்க்கன்டைல் வங்கி முதலிடம்

DIN

மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட கணக்கு (அடல் பென்ஷன் யோஜனா) தொடங்குவதில் தனியாா் துறை வங்கிகளிலேயே தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து வங்கியின் பொது மேலாளா் சூரியராஜ் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தனியாா் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா 

திட்டத்தின் மூலம் அரசாங்க உத்தரவாத ஓய்வூதியமாக ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.

நிகழ் நிதியாண்டில் அனைத்து வங்கிகளின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் அரசு நிா்ணயித்த 2500 கணக்கு எண் தொடங்க வேண்டும் என்ற இலக்கை விட கூடுதலாக 371.60 மடங்கு வளா்ச்சியை அளித்து 9290 கணக்குகளை தொடங்கி அனைத்து தனியாா் துறை வங்கிகளிலேயே மொ்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்றது.

இதன் மூலம் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி அரசின் அனைத்து நலத் திட்டங்களிலும் முழு உத்வேகத்துடன் பங்கேற்று மக்களுக்கு அளவற்ற சேவையை செய்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT