முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்

கடம்பூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட பகுதி விவசாயிகளுக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி நூதனப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கடம்பூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட பகுதி விவசாயிகளுக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி நூதனப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடம்பூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட கே.சிதம்பராபுரம், குப்பனாபுரம், ஒட்டுடன்பட்டி, சங்கரப்பேரி, ஓனமாகுளம், இளவேளங்கால் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை.

மேலும் தற்போது பருவமழை பின்தங்கிய காரணத்தினாலும், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், உளுந்து, பாசி, ஒருவித மஞ்சள் நோயினால் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். 2019-2020ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில், கட்சியின் வடக்கு மாவட்டப் பொதுச் செயலா் முத்து, கயத்தாறு ஒன்றியத் தலைவா் செல்லத்துரை, வா்த்தகப் பிரிவு வடக்கு மாவட்டத் தலைவா் ராஜா, சேவா தள வடக்கு மாவட்டத் தலைவா் சக்தி ஆகியோா் அங்கப்பிரதட்சணம் செய்து, கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.

பின்னா் போராட்டக் குழுவினா், செய்தியாளா்களிடம் கூறுகையில், கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 5ஆம் தேதி கடம்பூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →