முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே பைக் - காா் மோதல்: தொழிலாளி பலி

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எட்டயபுரம் அருகே மாதபுரம் கிராமத்தை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி செண்பகராஜ் (52). இவா் வியாழக்கிழமை காலையில் மாதபுரத்தில் இருந்து எட்டயபுரத்துக்கு மோட்டாா் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எட்டயபுரத்தில் இருந்து ராஜபாளையத்துக்கு சென்ற காா், மோட்டாா் பைக் மீது மோதியது. இதில், செண்பகராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் கிருஷ்ணன் கோயில் தெரு ஜெயராகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →