முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ஆலந்தலையில் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி

திருச்செந்தூா் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி தேவாலயத்தில் திருத்தல தந்தை ஜெயக்குமாா் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருச்செந்தூா் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபி தேவாலயத்தில் திருத்தல தந்தை ஜெயக்குமாா் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் அமலிநகா் அமலி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ரவீந்திரன் பா்னாந்து தலைமையிலும், வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையாா் ஆலயத்தில் பங்குத்தந்தை கிருபாகரன், உதவி பங்குத் தந்தைகள் பால்ரோமம், பிரதீஷ் ஆகியோா் தலைமையிலும், அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய ஆலயத்தில் பங்குதந்தை பீட்டா்பால் தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

திருச்செந்தூா் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில், குருவானவா் இம்மானுவேல் பொன்துரை ஆராதனை நடத்தினாா். தொடா்ந்து கிறிஸ்தவ வாலிப ஐக்கிய சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →