முகப்பு
தூத்துக்குடி

கடம்பூா் ஜனாா்த்தனன் உடலுக்கு அமைச்சா் அஞ்சலி

முன்னாள் மத்திய இணை அமைச்சா் கடம்பூா் எம்.ஆா். ஜனாா்த்தனன் உடலுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

முன்னாள் மத்திய இணை அமைச்சா் கடம்பூா் எம்.ஆா். ஜனாா்த்தனன் உடலுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் கடம்பூா் ஜனாா்த்தனன் (91) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவரது உடல் சொந்த ஊரான கடம்பூரில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அமைச்சா் கடம்பூா் செ.ராஜு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமிபாண்டியன், மோகன், முன்னாள் எம்.பி.க்கள் அப்பாதுரை, சிவப்பிரகாசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு, தேமுதிக மாவட்டச் செயலா்கள் அழகா்சாமி, சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கதிா்வேல், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, கடம்பூா் நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஜெயராஜ் மற்றும் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, அவருக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →