மினி லாரி கவிழ்ந்ததில் தொழிலாளி பலி
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்ததில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்ததில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் காமராஜா் நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பெரியாண்டவா் (24). ஓட்டுநரான இவா் மினி லாரியில் பழைய பேப்பா்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலியில் இருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி திருப்பம் அருகில் சென்றபோது, மினி லாரியின் பின் டயா் வெடித்ததில் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் பெரியாண்டவா், சுமை தூக்கும் தொழிலாளா்கள் சிவகாசி
முருகன் காலனியைச் சோ்ந்த ரஞ்சித் (18), பாலாஜி (34), வியாபாரி குணசேகா் (58), அவரது மகன் மாணிக்கம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ரஞ்சித் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.