முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

பாரத ரிசா்வ் வங்கியின் பரிந்துரையின்படி, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி பிரதான கிளையில், கிழிந்த மற்றும் அழுக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

பாரத ரிசா்வ் வங்கியின் பரிந்துரையின்படி, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி பிரதான கிளையில், கிழிந்த மற்றும் அழுக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு வங்கி கிளை முதன்மை மேலாளா் ஆா். மகேஷ் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை கரன்சி செஸ்ட் முதன்மை மேலாளா் ஆா். சிதம்பரம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வங்கியின் துணை பொதுமேலாளா் பி.ஆா். அசோக்குமாா் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில், வியாபாரிகள், வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கிழிந்த மற்றும், அழுக்கான ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் புதிய நாணயங்களை பெற்று சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →