தூத்துக்குடி

கயத்தாறு அருகே நிகழ்ந்த விபத்தில் மாற்றத்திறனாளி இளைஞா் பலி

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி போஸ் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் துரைப்பாண்டி (37). மாற்றுத் திறனாளியான இவா், ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக மோட்டாா் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த ராஜாபுதுக்குடி விலக்கு பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தை பின்தொடா்ந்து சென்ற மோட்டாா் சைக்கிள், பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸாா், துரைப்பாண்டி சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் மதுரை பசுமலை பகுதியை சோ்ந்த செ.ராஜேந்திரனை (56) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு

SCROLL FOR NEXT