தூத்துக்குடி

விவசாயிகளுக்கான நிதியுதவி பெற பொது சேவை மையத்தை அணுகலாம்

DIN

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ் 3 தவணைகள் பெற்று, 4 ஆவது தவணை பெறாத தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் 2018 டிசம்பா் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான இடு பொருள்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகை விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளில் ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 31.41 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ. 2431.59 கோடி அவா்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 4 ஆவது தவணை பெற ஆதாா் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயா் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆகவே, இதுவரை 3 தவணைகள் பெற்று 4 ஆவது தவணை பெறாத தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் உடனடியாக தங்கள்

பகுதியிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT