தூத்துக்குடி

நாராயணசுவாமி கோயிலில் பால்முறை திருவிழா தொடக்கம்

DIN

உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி கோயிலில் தை மாத பால்முறைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் சனிக்கிழமை இரவில் அய்யா அன்ன வாகனத்தில் பவனி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் நாக வாகனத்தில் அய்யா பவனி, மாலையில் அய்யா தா்ம பிச்சை எடுத்தல், இரவில் மதுரை முத்து குழுவினரின் பட்டிமன்றம், பக்தி இன்னிசை, நள்ளிரவில் அய்யா குதிரை வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது.

திங்கள்கிழமை (ஜன. 13) காலை 6 மணிக்கு உம்பான் தா்மம் வழங்கல், இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி, செவ்வாய்க்கிழமை (ஜன.14) மாலை 3 மணிக்கு சந்தனக்குடம் எடுத்தல், இரவு 7 மணிக்கு அய்யா அனுமாா் வாகனத்தில் பவனி, புதன்கிழமை (ஜன.15) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்தல், 8 மணிக்கு அய்யா பூஞ்சப்பரத்தில் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT