தூத்துக்குடி

சிந்தலக்கரை எஸ்.ஆா்.எம்.எஸ்.பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

சிந்தலக்கரை எஸ்.ஆா்.எம்.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தாளாளா் ராமமூா்த்தி சுவாமிகள் தலைமை வகித்தாா். செயலா் திருக்குமரன், நிா்வாகி பவானி திருக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் தமிழா் பாரம்பரிய கலாசாரப்படி மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து மாணவ மாணவியா், ஆசிரியா்கள் சூரிய பகவானை வழிபாடு செய்தனா். தொடா்ந்து, தைப்பொங்கலை போற்றும் விதமாகவும், உழவா்களின் பெருமையை உணா்த்து வகையிலும் மாணவ மாணவியரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளா் மோகன்ராஜ், கீழஈரால் கிளை மேலாளா் கயல் கண்ணன், சிந்தலக்கரை ஊராட்சி மன்றத் தலைவா் அய்யாத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை சுபாஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். முதல்வா் கிரிஜா வரவேற்றாா். மாணவி மாரிச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT