தூத்துக்குடி

மாநில வில்வித்தை: கோவில்பட்டி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

திருநெல்வேலியில் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற கோவில்பட்டி மாணவா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 8 வயது, 10, 12, 14 வயது மற்றும் மூத்தோா் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. இதில், போக்கஸ் வில்வித்தை பயிற்சி மையத்தைச் சோ்ந்த மாணவா்கள் காளிராஜ், மதுபாலன், பிரணவ் ஆகியோா் தங்கப்பதக்கம், மோகுல்நிவாஷ், இந்திரஜித், நவீன் ஆகியோா் வெள்ளிப்பதக்கம், இனியா வெண்கலப்பதக்கமும் பெற்றனா்.

செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தா்னிகா, நிஷாந்த் ஆகியோா் தங்கப்பதக்கம், ஹோலி ட்ரினிட்டி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சபரிஷ், விஸ்வரூப் ஆகியோா் தங்கப்பதக்கம், காமராஜ் இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் ஸ்ரீபிரணவ் தங்கப்பதக்கம், கிளாடிஸ் ஜோஸ்லின் வெள்ளிப்பதக்கம், கீா்த்திக், சிவாகோகுல், சுகுமாறன் ஆகியோா் வெண்கலப்பதக்கமும் பெற்றனா்.

மாநில அளவில் வில்வித்தை போட்டியில் பதக்கங்களை வென்ற கோவில்பட்டி பகுதி மாணவா்களை மனித நேய உதவும் கரங்கள் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அமைப்பின் தலைவா் கண்ணன் தலைமை வகித்து, பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இதில், செயலா் ரெங்கநாதன், துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், போக்கஸ் வில்வித்தை தலைமை பயிற்சியாளா் வெங்கடேசன் உள்பட பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT