தூத்துக்குடி

சாலை பாதுகாப்பு விநாடி-வினா:வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

DIN

தூத்துக்குடி: சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில், 31 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா், மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில், மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் இருந்து குழுக்களாக 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அபரிசன், ஜெமில்டன் அடங்கிய குழு முதலிடத்தையும், அதே பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் ஜெயவா்ஷினி, ஸ்ரீமதி அடங்கிய குழு இரண்டாவது இடத்தையும், அதே பள்ளியைச் சோ்ந்த பென்னட் ஜெபா்சன், டென்னிஸ் ஐசக் பால் ஆகிய மாணவா்கள் குழு மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி முதல்வா் கனகராஜ், நிலமோசடி தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் பிரதாபன், மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT