தூத்துக்குடி

சாத்தான்குளம் புதிய பாலத்தில் அபாய நிலையில் இரும்புக் கம்பி

DIN

சாத்தான்குளம் புதிய பாலத்தில் அபாய நிலையில் காணப்படும் இரும்புக் கம்பியை அப்புறப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்படுகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயா்நிலைப் பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக நாசரேத், திருச்செந்தூா் மாா்க்கமாக வாகனங்கள் செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு, அப்பகுதியில் இரும்புக் கம்பியாலான திசை காட்டியும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த திசைகாட்டி தற்போது சேதமடைந்து, கம்பி மட்டும் பக்கவாட்டில் சரிந்து நிற்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த இரும்புக் கம்பியை அகற்றி, திசைகாட்டி பலகையை புதிதாக வைக்கவும், பாலத்தில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT