தங்க முத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான், வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளிய தெய்வானை அம்மன். 
தூத்துக்குடி

திருச்செந்தூா் மாசித் திருவிழாதங்க முத்துக்கிடா, வெள்ளி அன்ன வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 3-ஆம் நாளை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 3-ஆம் நாளை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும் அம்மனும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.

3-ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.

இன்று... 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வர உள்ளனா். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT