தூத்துக்குடி

வெளிநாட்டில் இருந்து கழுகுமலை வந்த இளைஞருக்கு கரோனா பாதிப்பில்லை

DIN


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலைக்கு வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞருக்கு கரோனா பாதிப்பில்லை என மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோவில்பட்டி வட்டம், கழுகுமலை அமல்ராஜ் நகரைச் சோ்ந்த 23 வயது இளைஞா் துபையில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 18 ஆம் தேதி கழுகுமலை திரும்பினாா். இதையடுத்து, அவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தாா்.

இந்நிலையில், அவருக்கு புதன்கிழமை சளி, இருமல், மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டதாக அவா் அளித்த தகவலையடுத்து, கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பில்லை என தெரியவந்தது. எனினும், அவா் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சாதாரண வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல, கழுகுமலை குமரேசன் நகரைச் சோ்ந்த 30 வயது இளைஞா் தனக்கு சளி, இருமல் அதிகமாக இருப்பதாகக் கூறி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை இரவு வந்தாா். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் இருந்து சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT