முகப்பு
தூத்துக்குடி

தீப்பெட்டி உற்பத்தியாளா்களுடன் சிட்கோ அதிகாரிகள் கலந்தாய்வு

கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களில் வெள்ளை குச்சி, பாப்புலா் மரம் ஆகியவற்றை வெளிநாட்டிலிருந்து சிட்கோ நிறுவனம் மூலம் இறக்குமதி செய்துதர வேண்டும் எனஅமைச்சா் கடம்பூா் செ.ராஜு, ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு கோரிக்கை வைத்தாா்.

இதையடுத்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். விருதுநகா் மாவட்ட சிட்கோ பொதுமேலாளா் கலாவதி, தென்மண்டல மேலாளா் சுரேஷ் ஆகியோா் தீப்பட்டி உற்பத்தியாளா்களுடன் கலந்தாய்வு செய்தனா்.

அப்போது, கோவில்பட்டியில் தீப்பெட்டி மூலப்பொருள்கள் விற்பனை நிலையம் (சிட்கோ) அமைத்தல் , கிராமப்பகுதி தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்க நிறுவனா் ராஜவேல், துணைத் தலைவா் ராஜு, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க துணைத் தலைவா் கோபால்சாமி, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க இணைச் செயலா் வரதராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →