முகப்பு
தூத்துக்குடி

நாளை முதல்வா் வருகை:தூத்துக்குடியில் 4 இடங்களில் வரவேற்பு

தூத்துக்குடி வரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடியில் 4 இடங்களில் மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தூத்துக்குடி வரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடியில் 4 இடங்களில் மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரான அமைச்சா் கடம்பூா் செ. ராஜு, தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 10) நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி. கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறாா். அவருக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து, புதன்கிழமை (நவ. 11) காலை தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தரும் முதல்வருக்கு காலை 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாட்டிலும், அதன்பிறகு, தூத்துக்குடி 3 ஆவது மைல் புறவழிச்சாலை மேம்பாலம் மற்றும் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலிலும் இரு மாவட்ட அதிமுக சாா்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளமாறு கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.