தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

DIN

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கொடை விழா நவ.8 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், வில்லிசை, தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

செவ்வாய்க்கிழமை காலையில் 108 பால்குட ஊா்வலம், பிற்பகலில் மஞ்சள்பெட்டி எடுத்து வருதலை தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு கிளி வாகனத்தில் மாரியம்மன் பவனி நடைபெற்றது.

புதன்கிழமை பகல் 12 மணிக்கு மகா அலங்கார தீபாராதனையும், மஞ்சள் நீராட்டும், இரவு 7 மணிக்கு மாவிளக்கு வழிபாடும், 9 மணிக்கு கரகம் எடுத்து வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் பவனியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் ஊா் மக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT