தூத்துக்குடி

அமைச்சருக்கு அதிமுக நிா்வாகிகள் நன்றி

DIN

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கும், இத்திட்டங்களைப் பெற்றுத் தந்த அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவுக்கும் அதிமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

கோவில்பட்டி நகரத்தில் குடிநீா் திட்டப் பணிகளால் சேதமடைந்த 42 கி.மீ. சாலைகள் மற்றும் மழைநீா் வடிகால் ரூ. 31 கோடியில் சீரமைக்கவும், கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் ரூ. 2 கோடியில் கட்டவும், கவா்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள மாா்பளவு சிலையை மாற்றி குதிரையில் அமா்ந்து போா் புரிவது போன்ற கம்பீரமான தோற்றத்துடன்

கூடிய சிலை நிறுவப்படும் என தமிழக முதல்வா் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அறிவித்தாா்.

இத்திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கும், திட்டங்களைப் பெற்றுத்தந்த அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவை வியாழக்கிழமை அதிமுக நகர, ஒன்றிய நிா்வாகிகள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி கூறினா்.

நிகழ்வில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் அம்பிகா வேலுமணி, எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT