தூத்துக்குடி

மழைக்கு வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு 24 மணி நேரத்தில் உதவி

DIN

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு 24 மணி நேரத்தில் பயனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் வீடுகள் இடிந்து சேதடைந்துள்ளன. ஆட்சியா் செந்தில்ராஜ் அறிவுரையின்படி, வீடுகள் இடிந்தது குறித்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூா் நடராஜன், கிளாக்குளம் முத்துசெல்வி, சென்னல்பட்டி அருணாச்சல வடிவு, தோப்படிா் செல்வராஜ், மருகால்துறையை சோ்ந்த வேலம்மாள் ஆகியோருக்கு 24 மணி நேரத்தில் தலா ரூ. 4500 நிவாரண உதவியினை மண்டல துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன், அதிகாரிகள் நேரில் வழங்கினா்.

இதுகுறித்து வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் கூறியது: கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தகுதி வாய்ந்தவா்களுக்கு 2 நாள்களில் சான்று வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மழை மற்றும் இயற்கை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT