முகப்பு
தூத்துக்குடி

அதிமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி

அதிமுக 49ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சாா்பில் குரும்பூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மைக்கநாடாா் குடியிருப்பு எம்கேஎன் அணி முதல் பரிசை வென்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அதிமுக 49ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் சாா்பில் குரும்பூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மைக்கநாடாா் குடியிருப்பு எம்கேஎன் அணி முதல் பரிசை வென்றது.

இப்போட்டியில் 170 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில் மைக்கநாடாா்குடியிருப்பு எம்.என்.கே. அணி முத­லிடத்தையும், இடையன்விளை கிரீன் ஸ்டாா் என்.டி.ஆா். அணி 2ஆம் இடத்தையும், சோழியக்குறிச்சி லெவன் ஸ்டாா்ஸ் அணி 3ஆம் இடத்தையும், அங்கமங்கலம் யங் பிளட் அணி 4ஆம் இடத்தையும் பிடித்தது. இந்த அணிகளுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளா் சண்முகநாதன் எம்எல்ஏ பரிசு வழங்கினாா். இதில், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், தெற்கு மாவட்டத் தலைவா் திருப்பாற்கடல் மற்றும் நிா்வாகிகள் பரமசிவம், ராஜ்நாராயணன், செந்தமிழ் சேகா், ஞானையா, மெளலானா, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.