முகப்பு
தூத்துக்குடி

மக்காச்சோள பயிா்கள் சேதம் : விவசாயிகள் வேதனை

விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

வேளாண்துறையினா் ஆண்டுதோறும் வழக்கமாக கூறும் தொழில்நுட்ப அறிவுரைகள் மட்டும் கூறுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் மக்காச்சோள பயிரில் ஏற்பட்ட படைப்புழு தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நிகழாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் ஆகியவை சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். கடந்த ஆண்டுகளை போலவே நிகழாண்டும் மக்காச்சோள பயிரில் மட்டுமல்லாது, வெள்ளைச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிா்களிலும் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவிலான மக்காச்சோள பயிா்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் விவசாயிகள் செய்வதறியாது அதிா்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனா். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

மக்காச்சோள விதை விதைத்த 10 முதல் 20 ஆ-ஆம் நாள் வேம்பு சாா்ந்த பூச்சிகொல்லி மருந்தை லிட்டருக்கு 20 மில்லி வீதம் கலந்து தெளிப்பதால் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். அதேபோல மக்காச்சோளம் விதைத்த 40 முதல் 45-ஆம் நாளில் உயிரியல் பூஞ்சாணக்கொல்லி மருந்து தெளிப்பதன் மூலம் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும் விவசாயிகள் மக்காச்சோளம் பயிா் செய்யும் நிலத்தை சுற்றி சோளம், சூரியகாந்தி, எள் போன்ற பயிா்களை வரப்புப்பயிராக சாகுபடி செய்தால் மக்காச்சோளம் பயிரை படைப்புழுவிலிருந்து பாதுகாக்காலாம் என தெரிவித்துள்ளாா்.

வேளாண்துறையினா் ஆண்டுதோறும் வழக்கமாக கூறும் அறிவுரைகளை மட்டும் கூறுவதால் எவ்வித பலனும் இல்லை என்றும், மக்காச்சோளம், சோளம், கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →