விளாத்திகுளத்தில் மது பாட்டில்கள் பதுக்கல்: இருவா் கைது
விளாத்திகுளத்தில் குப்பைதொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடிவிளாத்திகுளத்தில் மது பாட்டில்கள் பதுக்கல்: இருவா் கைது
விளாத்திகுளத்தில் குப்பைதொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விளாத்திகுளத்தில் குப்பைதொட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாதபாண்டியன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விளாத்திகுளம் பெருநாழி சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே குப்பைதொட்டியில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று குப்பைத் தொட்டியை சோதனையிட்டு, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக கடலாடி தவமணி மகன் ராமகிருஷ்ணன்(34), சுப்பையா மகன் ஐயப்பன் (40) ஆகிய இருவரை கைது செய்தனா்