தூத்துக்குடி

திருச்செந்தூரில் தி.மு.க. சாா்பில் நல உதவிகள்

DIN

திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தங்க மோதிரங்களையும், அன்பளிப்பு பொருள்களையும் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மேலும், ஒரு பெண் குழந்தைக்கு துா்கா என பெயா் சூட்டினாா்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினா் பில்லா ஜெகன் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரப் பொறுப்பாளா் வாள்சுடலை, மாவட்ட துணை அமைப்பாளா்கள் கிருபா, சுதாகா், இளங்கோ, முன்னாள் பேருராட்சி உறுப்பினா் கோமதிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு வழிபாடு: முன்னதாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிமணியசுவாமி திருக்கோயிலில், இளைஞரணி சாா்பில் அதன் அமைப்பாளா் தலைமையில் உதயநிதிக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

ரத்த தான முகாம்: தெற்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தாா். இளைஞரணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் சுதாகா், அனஸ், தினேஷ் ராஜாசிங், ஒன்றியக்குழுத் தலைவா்கள் ஜனகா்(ஆழ்வாா்திருநகரி), பாலசிங் (உடன்குடி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம்: நாசரேத்தில் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நகர திமுக செயலா் ரவி செல்வகுமாா் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

விளாத்திகுளம்: எட்டயபுரத்தில் நகர இளைஞரணி அமைப்பாளா் குமாா் தலைமையிலும், புதூரில் பேரூா் செயலா் மருதுபாண்டியன் தலைமையிலும் கட்சிக் கொடியேற்றி, மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT