தூத்துக்குடி

மின்னொளியில் கைப்பந்துப் போட்டி: மெஞ்ஞானபுரம் அணி முதலிடம்

DIN

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, உடன்குடி அருகேயுள்ள வெள்ளாளன்விளை பிஷப் அசரியா பள்ளி மைதானத்தில் மின்னொளி கைப்பந்து போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன. போட்டியை தொழிலதிபா் ரா.ஆனந்த மகேஸ்வரன் தொடங்கி வைத்தாா். மெஞ்ஞானபுரம் அணி முதலிடமும்,வெள்ளாளன்விளை அணி 2 ஆவது இடமும், கொம்புத்துறை அணி 3 ஆவது இடமும், உடன்குடி கிறிஸ்தியாநகரம் அணி 4 ஆவது இடமும் பெற்றன.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிகள், சிறந்த வீரா்களுக்கு வெற்றிக் கோப்பை, பரிசுத் தொகை முறையே ரூ.25 ஆயிரம், 15ஆயிரம், 10ஆயிரம், 7 ஆயிரம் ஆகியவற்றை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மெய்யூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு உடன்குடி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா்.

கட்சியின் நகரச் செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் முகைதீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ,நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டியினை தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT