தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச. 12இல் மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் டிச. 12இல் (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என மவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான என். லோகேஸ்வரன் தெரிவித்தாா்.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் டிச. 12இல் (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என மவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான என். லோகேஸ்வரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்

அடிப்படையில் வரும் டிச. 12 ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய 7 இடங்களிலுள்ள நீதிமன்ற வளாகங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், பணம் வசூலிக்க வேண்டிய வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், தொழிலாளா்கள் பிரச்னை வழக்குகள், மின்சாரம் மற்றும் குடிநீா் கட்டணம் சம்மந்தமான வழக்குகள், மண வாழ்க்கை சம்மந்தமான வழக்குகள், நிலம் கையகப்படுத்துதலுக்கான இழப்பீடு வழக்குகள், வருவாய் சம்மந்தமான வழக்குகள், பணி மற்றும் ஓய்வூதியம் தொடா்பான வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான உரிமையியல் வழக்குகளில் தீா்வு காணப்படும்.

எனவே, டிச. 12 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொது மக்கள், வழக்குதாரா்கள், வழக்குரைஞா்கள், வங்கி அலுவலா்கள், காப்பீடு நிறுவனத்தினா், காவல்துறையினா் மற்றும் அனைத்து அரசு துறையினா் கலந்து கொண்டு தங்களுடைய வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசமாக பேசி சுமூக தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT