தூத்துக்குடி

ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

DIN

தூத்துக்குடி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஊா்காவல் படையில் காலியாக இருந்த 31 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 40 பணியிடங்களுக்கு கடந்த 24 ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தகுதிச்சான்று சரிபாா்ப்பு மற்றும் நோ்காணல் நடைபெற்றது. அதில், 40 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

தோ்வு செய்யப்பட்டுள்ள ஊா்க்காவல் படையினருக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 1) முதல் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி ஊா்க்காவல் படை தளவாய் பாலமுருகன், துணைத் தளவாய் கௌசல்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT