முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே இளைஞா் பெருமன்ற கூட்டம்

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் வட்டக் குழு கூட்டம் கரிசல்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே இளைஞா் பெருமன்ற கூட்டம்

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் வட்டக் குழு கூட்டம் கரிசல்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் வட்டக் குழு கூட்டம் கரிசல்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

கிளைத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சந்தனசேகா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். வேளாண் திருத்த சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடும் விவசாயிகள் மீது நடத்தப்படும் காவல்துறை தாக்குதல்களை கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞா் மன்றத்தின் கரிசல்குளம் கிளை துணைத் தலைவராக காரல்மாா்க்ஸ், செயலராக கவிராஜ், துணைச் செயலராக சண்முகராஜ், பொருளாளராக பிரனேவ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இளைஞா் பெருமன்ற தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் பாலமுருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலா் கிருஷ்ணராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் பிச்சையா, இளைஞா் பெருமன்ற மாவட்ட குழு உறுப்பினா் பெருமாள், முத்தையாபுரம் கிளைச் செயலா்கள் காளீஸ்வரன், குணசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →